பருத்தி
இந்தியா உலகின் மிகப்பெரிய பருத்தி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகும்.
ஒரு முக்கிய வணிகப் பயிரான பருத்தி, காரீப் பருவத்தில் சுமார் 11-12 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
பருத்தி விவசாயம் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதுடன், பருத்தி அரைத்தல் (ஜின்னிங்), அழுத்துதல் (பிரெஸ்ஸிங்) மற்றும் போக்குவரத்து போன்ற அது சார்ந்த தொழில்களை இயக்குகிறது.
உங்கள் பருத்திப் பயிருக்கு பாஸ்பரஸ் (மணிச்சத்து) ஏன் தேவைப்படுகிறது?
வலுவான வேர் மற்றும்
ஆரம்பகால பயிர் நிலைநிறுத்தம்
பாஸ்பரஸ் சத்தானது ஆழமான வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, இது பருத்திச் செடிகள் விரைவாக நிலைபெறவும், ஆரம்பகால வறட்சி போன்ற அழுத்தங்களைத் தாங்கவும், மண்ணிலுள்ள ஊட்டச்சத்துக்களை மிகவும் திறமையாகப் பயன்படுத்தவும் உதவுகிறது.
பூத்தல், சப்பைகள்/காய்கள்
உருவாக்கம் மற்றும் தக்கவைத்தல்
இது ஆற்றல் பரிமாற்றத்திற்கு (ATP) உதவுகிறது, இது பூக்கும் காலத்தில் மிகவும் அவசியமானதாகும்; இது சிறந்த முறையில் காய்கள் பிடிப்பதற்கும், சப்பைகள் மற்றும் காய்கள் கொட்டுவதைக் குறைப்பதற்கும், பயிர் ஒரே சீராக வளர்வதற்கும் வழிவகுக்கிறது.
மகசூல் மற்றும்
பஞ்சின் தரம் மேம்பாடு
போதுமான அளவு பாஸ்பரஸ் சத்து இருக்கும்போது, அது பருத்திக் காயின் அளவு, விதை வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துகிறது, மேலும் இறுதியில் ஒட்டுமொத்த மகசூலையும், பஞ்சின் இழை வலிமை மற்றும் தரத்தையும் அதிகரிக்கிறது.